ETV Bharat / state

அவதூறு பரப்புவோர்கள் மீது நடவடிக்கை- எஸ்பியிடம் மனு கொடுத்த மெய்யடியார்கள்! - thiruvallur district news in tamil

மெய்வழி மத வழிபாடு, அதன் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மெய்வழி மதத்தினர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

meivazhi-salai-member-gave-petition-to-thiruvallu-sp-seeks-action-against-those-who-spread-slander
அவதூறு பரப்புவோர்கள் மீது நடவடிக்கை- எஸ்பியிடம் மனு கொடுத்த மெய்யடியார்கள்
author img

By

Published : Aug 4, 2021, 4:18 AM IST

திருவள்ளூர்: மெய்வழி மத வழிபாடு, அதன் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என 30க்கும் மேற்பட்ட மெய்வழி மதத்தினர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும், மெய்வழி மத வழிபாடை இழிவு செய்யும் வகையில் உள்ள குறிப்பிட்ட காணொலியை நீக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மெய்யடியார் மோகன், " நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் மெய்வழி சபை மெய்வழி ஆண்டவரை வணங்கிவருகிறோம்.

அனைத்து மதமும் சமம் என ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த யோகக்குடில் சிவக்குமார், கோவையைச் சேர்ந்த சுப்பிரமணி ஆதித்தன் ஆகியோர் எங்களது மதத்தையும், ஆண்டவரையும் கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

எங்கள் மதம், நம்பிக்கைகள் குறித்து அவதூறு பரப்பிவரும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் பதிவிட்ட காணொலிகளையும் நீக்கவேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: மதம், சாதிகளை துறந்து மனிதர்களாக சங்கமிக்க ஓர் மதம்(மெய்வழி)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.