ETV Bharat / state

6 வயது சிறுமி தொடுத்த வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு கெடுவிதித்த நீதிமன்றம்! - 6 வயது சிறுமி தொடுத்த வழக்கு

திருவள்ளூர் : மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியை ஓராண்டுக்குள் கட்டி முடித்து பாடம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Meenjur damaged school building, HC gave time for renovations
6 வயது சிறுமி தொடுத்த வழக்கு : தமிழ்நாடு அரசுக்கு கெடுவிதித்த நீதிமன்றம் உத்தரவு!
author img

By

Published : Mar 3, 2020, 9:58 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள பொன்னேரி தாலுகாவைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி அதிகை முத்தரசியும், அவரது தந்தை பாஸ்கரனும் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

சிறுமி தொடுத்த மனுவில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, கட்டடத்தைப் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, முன்னதாக அப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வுசெய்ய உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வுசெய்த மாநகராட்சி தரப்பு, அதனை அறிக்கையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது.

Meenjur damaged school building, HC gave time for renovations
6 வயது சிறுமி தொடுத்த வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு கெடுவிதித்த நீதிமன்றம்!

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி சேதமடைந்துள்ளது உண்மைதான் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளியின் ஒரு பகுதி முழுமையாக இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட இருப்பதாகவும், சேதமடைந்த மற்றொரு பகுதி சீரமைக்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கல்வி மட்டுமல்லாது மாணவர்களுக்கு உடற்பயிற்சியும் அவசியம் எனத் தெரிவித்த நீதிபதிகள், பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டனர். மேலும், சேதமடைந்துள்ள பள்ளியை ஓராண்டிற்குள் கட்டி முடிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

வழக்கை தொடுத்த சிறுமி அதிகை முத்தரசிக்குப் பாராட்டுகளையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : ’ரஜினி-கமல் கூட்டணி, கல்யாணமே ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமம்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.