ETV Bharat / state

உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் - பெற்றோர் கதறல்

author img

By

Published : Feb 26, 2022, 10:33 AM IST

Updated : Feb 26, 2022, 10:42 AM IST

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் திருவள்ளூரைச் சேர்ந்த இரண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை மீட்கக் கோரி ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைனில் தவிக்கும் மருத்துவ மாணவர்கள்- மாவட்ட ஆட்சியரிடம் மீட்க பெற்றோர் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் அல்லிக்குழி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சத்தியநாராயணன். இவரது மகன் வெங்கட்நாராயணன் (24). அதேபோல சென்னை பெரம்பூர் செம்பியம் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ஜெய் கிஷோர் (23) இருவரும் உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு பயின்று வருகின்றனர்.

தற்போது உக்ரைன் நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கிருந்தவர்கள் உயிர் பிழைக்க நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் உக்ரைன் நாட்டில் சிக்கி அவதியுற்று வருகிறார்கள்.

மேலும், உக்ரைன் நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், தங்களை உடனடியாக இங்கிருந்து மீட்டு உடனடியாக இந்தியா கொண்டு செல்லுமாறு மேற்கண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு போன் செய்து அழுதுள்ளனர்.

இதனால், மன வேதனை அடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தந்தையர்கள் சத்தியநாராயணன், ரவிக்குமார் ஆகியோர் நேற்று (பிப். 25) இரவு திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் தங்களது மகன்களான வெங்கட் நாராயணன், ஜெய் கிஷோர் ஆகியோரை பாதுகாப்பாக உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறி கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.

ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை

இச்சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் அவர்கள் இது தொடர்பான மனுவையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆட்சியரிடம் அளித்தனர். அதைப் பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

வெங்கட் நாராயணன், ஜெய் கிஷோர்

இதையும் படிங்க:புடின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

Last Updated : Feb 26, 2022, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.