தமிழ்நாட்டின் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 126 பேர் மார்ச் 13 முதல் 17ஆம் வரை வாரணாசிக்கு புனித யாத்திரையாகச் சென்றுள்ளனர். கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. அதனால் அவர்கள் அனைவரும் மடம் ஒன்றில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் அனைவரும் அம்மாநிலத்தில் அனுமதி பெற்று மூன்று பேருந்துகளில் புறப்பட்டு இன்று (ஏப்ரல் 17) காலை நெல்லூர் வழியாகத் தமிழ்நாடு வந்தனர். அங்கு வந்த அவர்களைக் காவல் துறை தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்குத் தகவல் அளித்தனர்.
அதையடுத்து அவரின் உத்தரவின்பேரில், யாத்ரீகர்கள் 126 பேரும் புதூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கிய திருவள்ளூர் எம்எல்ஏ!