தைப்பொங்கலின் இரண்டாம் நாளான இன்று கால்நடைகளை போற்றும் வண்ணம் திருவள்ளூர் மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தைப்பொங்கல் தினத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வண்ணம், பொங்கல் படையலிட்டு அனைவரும் வணங்கினர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து பொங்கலிட்டு 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாட்டுப் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் - திமுக கூட்டணி விரிசல் - நீக்கப்படுகிறார் அழகிரி?
இவ்விழாவை தன்னார்வ நிறுவனம் மற்றும் விவசாயிகள் இணைந்து சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த விழாவில், பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.