திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் எம். சக்தி நாராயணன். இவருக்கும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஆர். ரம்யா என்ற பெண்ணிற்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுடன் அப்பகுதியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் திருக்கோயிலில், ஆகம முறைப்படி மணமகன் சக்தி நாராயணன், ரம்யாவை கரம்பிடித்தார்.
இந்தத் திருமண விழாவில் மணமக்களின் சார்பில், உறவினர்கள் பத்து பேர் கலந்துகொண்டு, சமூக இடைவெளியுடன் மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பு: முத்து நகரமான தூத்துக்குடியின் பொருளாதார நிலை?