திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பலராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்து 137 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம், காசோலைகள் வழங்கப்பட்டன.
இதனை பெறுவதற்காக சோழவரம், மீஞ்சூர், திருவொற்றியூர், புழல், மாதவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பயனாளிகள் வந்தனர்.
அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி காலை 10 மணிக்கே பயனாளிகள் மண்டபத்தில் குவிந்தனர். ஆனால் மண்டபத்தில் மதியம் 2 மணிக்கு மேலே நிகழ்ச்சிகள் நடந்தன.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் பலராமனும் தாமதமாக வரவே, அலுவலர்கள் காசோலை, தங்கத்துடன் காலதாமதமாக பங்கேற்றனர். இதனிடையே உணவு இன்றியும் போதிய குடிதண்ணீர் இன்றியும் தவித்துப் போன தாய்மார்கள் சோர்வடைந்து நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியே வந்து அமர்ந்தனர்.
இதையடுத்து, ஆறு மணி நேரம் கால தாமதத்துக்குப் பின்னர் அலுவலர்கள் கொண்டு வந்த தங்கத்தையும், காசோலையையும் பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பலராமன் வழங்கினார். மேலும் கால தாமதத்திற்கு காரணமான அலுவலர்களை இனி இதுபோல் அலைக்கழிக்க வேண்டாம் என பயனாளிகள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: தாயை பிரிந்த குட்டியானை - தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை தோல்வி!