ETV Bharat / state

நடைபாதை வியாபாரிகள் மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணா போராட்டம்..! - Market workers protest

திருவள்ளூர்: மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபாதை வியாபாரிகள் போராட்டம்
author img

By

Published : Jun 29, 2019, 12:04 PM IST

சென்னை அருகே வளர்ந்து வரும் ஊர்களில் ஆவடியும் ஒன்று. இங்கு பேருந்து நிலையம்,ரயில் நிலையம், மார்கெட் உள்ளிட்டவை அருகே இருப்பதால் போக்குவரத்திற்காகவும் வணிகத்திற்காகவும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் ஆவடி பகுதி எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும். இந்நிலையில் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி ராணுவ சாலை வரை காய்,கனி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நடைபாதை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் விதமாக நடைபாதை வியாபாரிகளுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.62 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்பட்டது. 68 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகம், 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

ஆனால் அந்த கடைகளுக்கு அதிக தொகை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடபட்டதால் நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடினர். இப்படி பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக வணிக வளாகம் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 68 கடைகளுக்கும் இன்று ஓபன் டெண்டர் விடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.

நடைபாதை வியாபாரிகள் போராட்டம்

அப்படி ஓபன் டெண்டர் விட்டால், ஆளும் கட்சி பிரமுகர்கள், பணம் படைத்த முதலாளிகள் கடையை ஏலம் எடுத்து மேல் வாடகைக்குவிடும் சூழல் ஏற்படும் என்பதால், அதிருப்தியடைந்த நடைபாதை வியாபாரிகள், தங்களுக்கு கடையை ஒதுக்க வேண்டும் என மண்ணெண்ணெய் கேனுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி காவல்துறையினர், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

Intro:ஆவடி மாநகராட்சிக்கு அருகே நடைபாதை காய்கறி வியாபாரிகளுக்கென கட்டப்பட்ட வணிக வளாகத்தை உள்ளூர் வியாபரிகளுக்கு ஒதுக்காத மாநகராட்சியை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கையில் மணெண்ணை கேனுடன் நகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுBody:சென்னை அருகே வளர்ந்து வரும் ஊர்களில் ஆவடியும் ஒன்று.இங்கு பேருந்து நிலையம்,ரயில் நிலையம், மார்கெட் உள்ளிட்ட பகுதிகள் அருகே இருபதால் போக்குவரத்திற்காகவும், வணிகத்திற்காகவும் மற்ற பகுதி மக்களுக்கும் இங்கு வந்து செல்கின்றனர்.இதனால் ஆவடி எப்போதும் பரபரபாக காட்சி அளிக்கும். ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி ராணுவ சாலை வரை காய்,கனி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நடைபாதையில் கடை அமைத்து சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.குறிப்பாக ஆவடி ராணுவ சாலையில் நடைபாதை கடைகள் இயங்கியதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 2012 ஆம் ஆண்டு 62 லட்சம் மதிப்பில் காய்கனி வணிக வளாகம் கட்டப்பட்டது. 68 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகம் ஓராண்டிற்கு பின்பு 2013 திறக்கப்பட்டது. ஆனால் கடைகளுக்கு அதிக தொகை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடபட்டதால் நடைப்பாதை வியாபாரிகளுக்கு கடைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நீதிமன்றத்தை நாடினர்.இப்படி பல்வேறு காரணங்களுக்காக கடந்த 6 ஆண்டுகளாக வணிக வளாகம் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 68 கடைகளுக்கும் இன்று ஓபன் டெண்டர் விடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்த்து. அப்படி ஒபன் டெண்டர் விட்டால்.ஆளும் கட்சி பிரமுகர்கள், பணம் படைத்த முதலாளிகள் கடையை ஏலம் எடுத்து மேல் வாடகைவிடும் சூழல் ஏற்படும்.இதனால் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கடையை ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் திடீரென மண்ணெண்ணெய் கேனுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மாநகராட்சி வாசல் முன்பு அமர்ந்தும் படுத்தும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் மாநகராட்சி ஆணையர் ஜோதி குமாரை சந்தித்து முறையிட்டனர்.பின்னர் பேசிய செய்தியாளர்கள் வணிக வளாகத்தில் கடை ஒதுக்கவில்லை என்றால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.தங்களுக்கு கடை என்றால் தங்களது ரேஷன்,ஆதார்,வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.