திருவள்ளூர்: Bigg Boss Abhirami: நகரில் உள்ள தனியார்ப் பள்ளியில் இந்தியப் பாரம்பரிய நடனங்களான பரதம் மற்றும் குச்சுப்புடி நாட்டியம் ஆகியவை நடைபெற்றன.
இந்த நாட்டியத்தை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட 15 ஊர்களைச் சேர்ந்த 365 மாணவிகள் ஆடி காண்போர்களை மகிழ்வித்தனர்.
இதற்கு திருவள்ளூரில் உள்ள தனியார் நாட்டிய பள்ளித்தலைவர் ஸ்ரீவித்யா தலைமை தாங்கினார்.
மேலும், இந்தப் பரதநாட்டிய விழாவில் பிக்பாஸ் புகழ் கிளாசிக்கல் நடன நடிகையான அபிராமி வெங்கடாச்சலம், பங்கேற்று நடனம் ஆடிய மாணவிகளுக்குப் பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை Bigg Boss Abhirami, 'தற்போது கரோனா தொற்றுப் போய் ஒமைக்ரான் வந்துள்ளது.
எனவே, மக்கள் அலட்சியமாக இருக்காமல் கவனமாக இருக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து, இரண்டு தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
மேலும், அவர் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறினார்.
இதையும் படிங்க: 'வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை வகுக்க வேண்டும்'