Man vandalises Periyar statue: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்தச் சிலையின் முகத்தை நேற்று (டிசம்பர் 26) இரவு யாரோ சேதப்படுத்தியுள்ளனர்.
இத்தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் சிலை முன்பு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
பெரியாரின் உருவச் சிலையைச் சேதப்படுத்தியவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்லக்கிளி என்பவர் சிலையைச் சேதப்படுத்தியதாக தானாக முன்வந்து பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படும் - செந்தில்பாலாஜி