திருவள்ளூர்: ஈக்காடு பெத்தேல்புரத்தை சேர்ந்த மணி என்பவர் உடல்நிலை சரியில்லாமல் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவருக்கு நேற்று (ஜூன் 17) ஆறுதல் ஜெபக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள மணியின் உறவினரான செங்கல்பட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் ஈக்காடு பகுதிக்கு நேற்று சென்றுள்ளார். பெட்ரோல் பங்க் எதிரே சென்ற போது, அடையாளம் தெரியாத இருவர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். ராதாகிருஷ்ணன் பணத்தை கொடுக்க மறுத்ததால் அவரை குத்திவிட்டு பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து உறவினர்கள் ராதாகிருஷ்ணனை மீட்டு, திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக புல்லரம்பாக்கம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: யூடியூபர் மதனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!