திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குள்பட்ட பொதட்டூர்பேட்டை கூட்டு சந்திப்பு சாலையில், திருத்தணி குற்றப்பிரிவு காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவரை காவல் துறையினர் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின்போது அவர் திருத்தணியில் பல்வேறு இடங்களில் இருசக்கர மோட்டார் சைக்கிள்கள் திருடும் நபர் என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறையினர் தரப்பில், அவர் பெயர் சந்திரசேகர் (34) என்றும் சந்திரசேகரபுரம் கிராமம் பள்ளிப்பட்டு தாலுகா என்றும் கூறினர். பிடிபட்ட சந்திரசேகரிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.
பின் சந்திரசேகர் மீது குற்றப்பிரிவு திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
