மாஃபா அறக்கட்டளை சார்பில் இளைஞர் மேம்பாடு, மருத்துவம், சுற்றுச்சூழல், மகளிர் திறன் மேம்பாடு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சிகள் முடித்த 600 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த 600 பெண்களுக்கு சான்றிதழ்களும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
இதில் அமைச்சர்கள் பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார்கள் இதையடுத்து அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:
’திமுக சங்கர மடம் இல்லை’ என்று கூறியவர்கள் தற்போது ’மூன்றாவது தலைமுறை வாரிசுகள் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்’ என்று சொல்கிறார்கள். திமுக இன்னும் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என நான் நினைக்கிறேன்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி கொண்டுவருவது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன்.
போக்குவரத்து காவல் துறையினர் வழங்கும் அபராத சீட்டில் தமிழ் இல்லை என்பதை மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் நிச்சயம் செய்யப்படும். கண்டிப்பாக மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். தமிழும் அதற்கு இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ‘சர்ச்சை பேச்சை சீமான் திரும்பப் பெறவேண்டும்’ - அமைச்சர் கே. பாண்டியராஜன்