ETV Bharat / state

குறைந்த செலவில் கிருமிநாசினி தயாரிக்கும் இயந்திரம்! - மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

திருவள்ளூர்: குறைந்த செலவில் கிருமிநாசினி தயாரிக்கும் இயந்திரத்தை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் அதனைத் தொடங்கிவைத்தார்.

குறைந்த செலவில் கிருமிநாசினி தயாரிக்கும் இயந்திரம்

author img

By

Published : Apr 29, 2020, 11:42 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட சர்க்கரை கிராமத்தில் சூரிய ஒளி சக்தியைப் பயன்படுத்தி எளிய தொழில்நுட்பம் மூலம் கிருமி நாசினியை குறைந்த உற்பத்திச் செலவில் தயாரிக்கும் இயந்திரம் குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த அறிவியலாளர் இளங்கோ என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

குறைந்த செலவில் கிருமிநாசினி தயாரிக்கும் இயந்திரம்

இந்த இயந்திரத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கி, நகர்ப்புறப் பகுதிகளில் உற்பத்திசெய்து உள்ளாட்சிகள் பயன்பாட்டிற்குப் பொதுமக்களுக்கு விற்பனைசெய்து அதன்மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் சத்திர கிராம ஊராட்சியில் இந்த இயந்திரம் வழங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரால் தொடங்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் முகத்திரை அணியாமல் வந்த 206 நபர்கள் மீது தலா 200 ரூபாய் வீதம் 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் முகத்திரை அணியாமல் வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.