திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், தனியார் பள்ளிகளைப் போன்றே எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் மாணவர்கள் புதிய சேர்க்கை தொடங்கியதை தொடர்ந்து, மாணவர்களை கிராம மக்கள் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வரவேற்று, அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, பள்ளி வகுப்பறைக்கு ரிப்பன் வெட்டி மாணவர்களை உள்ளே அனுப்பி வைத்தனர். மரங்களை வீடுகளில் சிறப்பாக வளர்க்கும் மாணவர்களைப் பாராட்டி பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்து பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்க்கும் விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
முன்னதாக, மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.