திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் கடை ஊழியர் துளசிராமன் என்பவர் நேற்று (அக்.4) இரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இதனைக்கண்டித்து ஆவடி உள்ளிட்ட 336 டாஸ்மாக் கடைகளை அடைத்து, அதன் பணியாளர்கள் இன்று (அக்.5) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவல் துறையினரின் பேச்சு வார்த்தையை அடுத்து மதியம் சுமார் ஒன்றரை மணி அளவில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மதுப்பிரியர்கள் கொட்டும் மழையிலும் குடைகளுடன் வந்து ஆர்வமுடன் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
சேலம்
சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை அடைத்து அதன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சந்தியூர் பகுதியில் உள்ள மாநில வாணிபக் கழகம் மொத்த விற்பனை கிடங்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சாலைகளை சீரமைக்கக்கோரிய வழக்கு: மதுரை கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு