திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் முக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆங்காடு கிராமத்தில் நாற்று நடும் பணிகளுக்காக சரக்கு வாகனத்தில் நேற்று (ஜூன் 25) சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
வாகனத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இருந்ததை அறிந்த காவல் துறையினர் தகுந்த இடைவெளியின்றி அவர்களைப் பணிக்குச் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். அதையடுத்து அப்பெண்கள் அனைவரும் விவசாய பணிகளுக்கு தடை ஏதும் இல்லை என முதலமைச்சர் அறிவித்திருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து காவல் துறையினர் பாதுகாப்பாகப் பணி செய்யும்படி அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.
முதலமைச்சர், தகுந்த பாதுகாப்புடன் (முகக்கவசம், தகுந்த இடைவெளி) விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். ஆனால், விவசாய பணிக்குச் செல்லும் பெண்கள் தகுந்த இடைவெளியை மறந்துவிட்டார்கள்போலும். மக்களிடையே இன்னும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: இயற்கை வேளாண்மை என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் டார்ஜிலிங் தேயிலை விவசாயிகள்