திருவள்ளூர் மாவட்டம் புழலை அடுத்த சூரப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் ராதிகா. இவருக்கு திருமணமாகி ஒரு சில வருடங்களிலேயே தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அவரை விவகாரத்து செய்துவிட்டு, தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், 2017 நவம்பர் மாதம் ஜெய்கரன் என்ற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ஜெய்கரன் நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு முதல் கணவர் மூலம் பிறந்த 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த ராதிகா, தனது மகளை அழைத்துக்கொண்டு, ஜெய்கரன் மீது புகார் கொடுப்பதற்காக புழல் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் நடராஜன், 17 வயதான அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுபற்றி காவல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ராதிகா திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பரணிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை வருகிற 10-ந்தேதி தள்ளி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.