திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பொது கும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன் கண்டிகையைச் சேர்ந்தவர் வனஜா (எ) ராதா (42). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வனஜாவின் தனது மளிகைக் கடையில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக சிப்காட் காவல் துறையினருக்கு முன்னதாகத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வனஜா மளிகைக்கடையில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, விற்பனைக்காக அவர் வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து வனஜாவை கைது செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வனஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 150 கிலோ கஞ்சா கடத்தல்; இருவர் கைது!