ETV Bharat / state

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

author img

By

Published : May 4, 2019, 7:03 AM IST

திருவள்ளூர்: மேல்நிலை அருகே கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களை திடீரென பணியில் இருந்து நீக்கியதால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

protest

திருவள்ளூர் அடுத்த மேல்நிலையில் எச்.எம்.எப்.சி.எல் எனப்படும் கார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் விற்றுவிட்டதால் நிரந்தர பணியாளர்களாக உள்ள அலுவலக ஊழியர்களை முதல் கட்டமாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.

தொழிற்சாலையின் 76 சதவீத பங்குகளை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு அண்மையில் விற்பனை செய்த போதிலும், மீதமுள்ள 24 சதவீத பங்குகளை அந்நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிலையில் பணியாளர்களுக்கு பணிமாற்றம் செய்து தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில், நிரந்தரப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து விலக வேண்டுமென தொழிற்சாலை நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

இதனால் நான்கு ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை பணிபுரிந்தவர்களின் குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. மீண்டும் அதே நிறுவனத்தில் பணிபுரிய வழி செய்ய வேண்டுமென ஊழியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இதைத் தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களது முடிவை கைவிட்டதால் ஊழியர்கள் நேற்று முதல் தொழிற்சாலைக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், நிர்வாகம் நேரடியாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்காவிட்டால் இந்த வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து எங்கள் உயிர்களை விடுவோம்" என்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் நிரந்தரப் பணியாளர்கள் 100 பேருக்கு மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்கியதால் இன்று முதல் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Body:திருவள்ளூர் அடுத்த மேல்நிலையில் எச்.எம்.எப்.சி எல் எனப்படும் கார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை பிரான்ஸ் நாடு நிறுவனத்திடம் விற்றுவிட்டதால் நிரந்தர பணியாளர்களாக உள்ள அலுவலக ஊழியர்களை முதல் கட்டமாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.மேலும் தொழிற்சாலையின் 76 சதவீத பங்குகளை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு அண்மையில் விற்பனை செய்த போதிலும் மீதமுள்ள 24 சதவீத பங்குகளை இந்த எச்.எம்.எப்.சி எல் நிறுவனம் வைத்துள்ளது.இந்த நிலையில் தங்களுக்கு பணி மாற்றம் செய்து தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு பெருமளவு பங்குகளை விற்பனை செய்ததால் நிரந்தரப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து விலக வேண்டுமென கம்பெனி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இதனால் நான்கு ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை பணிபுரிந்தவர்களின் குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.மீண்டும் அதே நிறுவனத்தில் பணிபுரிய வழி செய்ய வேண்டும் என ஊழியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களது முடிவை கைவிட்டதால் ஊழியர்கள் இன்று முதல் தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.அப்பொழுது அவர்கள் கூறுகையில் கம்பெனி நிர்வாகம் நேரடியாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.மேலும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இந்த கோரிக்கைகளை ஏற்காவிட்டால் இந்த வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் இருந்து எங்கள் உயிர்களை விடுவோம் என்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.