ETV Bharat / state

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை - Thiruvallur House Theft

திருவள்ளூர்: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் நகை கொள்ளை கும்மிடிப்பூண்டி நகை கொள்ளை தண்டலச்சேரி நகை திருட்டு Thiruvallur Jewel Theft Kummidi Poondi Jewel Theft Thiruvallur House Theft Kummidi Poondi House Jewel Theft
Kummidi Poondi Jewel Theft
author img

By

Published : Jan 9, 2020, 11:39 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன்-ஜீவிதா தம்பதியினர். சரவணன் தனியார் நிறுவன ஒப்பந்ததாரராகவும் தனது வீட்டின் அருகில் மளிகை கடை ஒன்றையும் நடத்திவருகிறார். இந்தத் தம்பதிக்கு பிரியா (15 ), ஷாலினி (14) என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கவரப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்துவருகின்றன்ர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜீவிதா, பிரியா ஆகிய இருவரும் பழையனூர் கோயிலுக்கும் இளைய மகள் ஷாலினி பள்ளிக்கும் சென்றிருந்த நிலையில், நேற்று மதியம் இரண்டு மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு சரவணன் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து, ஜீவிதா கோயிலிலிருந்து வீடு திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜீவிதா வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது பீரோவிலிருந்த 25 சவரன் நகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் இது குறித்து ஜீவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை - சேலத்தில் பரபரப்பு!

Intro:திருவள்ளூர் அருகேதனியார் நிறுவன ஒப்பந்ததாரர் இன் வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் 25 சவரன் நகை ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை,மர்மநபர்கள் கைவரிசை.Body:திருவள்ளூர் அருகேதனியார் நிறுவன ஒப்பந்ததாரர் இன் வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் 25 சவரன் நகை ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை,மர்மநபர்கள் கைவரிசை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.