ETV Bharat / state

தமிழ்நாடு எல்லைக்குள் வந்த கிருஷ்ணா நதி நீர்! - tiruvallur district

திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லையை வந்தடைந்தது.

கிருஷ்ணா நதிநீர்
கிருஷ்ணா நதிநீர்
author img

By

Published : Sep 21, 2020, 12:44 PM IST

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்படவேண்டும். அந்த ஒப்பந்தத்தின்படி இந்த பருவத்திற்கான தண்ணீர் கடந்த 18ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி திறந்து விடப்பட்டது. பின்னர் 2000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதி நீர்

அது தற்போது கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஜீரோ பாயின்ட்க்கு வந்தடைந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்த்தூவி வரவேற்றனர். விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை(செப் 22) காலை பூண்டி ஏரியை இந்நீர் சென்றடையும். இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இந்தப் பருவத்தில் முதற்கட்டமாக 4 டிஎம்சி தண்ணீர் வழங்குவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளதாகவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் சேதமடைந்துள்ள பூண்டி - கண்டலேறு கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், விரைவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனவும் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தானே கட்டட விபத்து: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.