இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எச்சரிக்கை நேற்று (அக். 8) இரவு 11.00 மணி முதல் 4.00 மணி நேரத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்து ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. அதன்பிறகு, அங்கு தொடர் மழையின் இருப்பின் இந்த தண்ணீர் அளவை உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிப்பட்டு பாலத்தைக் கடக்கும். நாளை காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அக்கரையோர பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகவல் வருவாய்த்துறை, காவல் துறை,பொதுப்பணித்துறை ஆகிய துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும் பணியில் தயார் நிலையில் உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க...நில எடுப்பு அசல் வழக்குகளை விரைந்து தீர்வு காண நடவடிக்கை - சிப்காட்