திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் முழு கொள்ளளவானது 35 அடியாகும். தற்போது பெய்து வரும் கனமழையால் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கமானது 34 அடியை எட்டியுள்ளது.
எனவே அணையின் பாதுகாப்பை கருதி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி நீரானது வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெய்யூர், ராஜபாளையம், பாதிரிவேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ’மழைக்காலங்களில் மருத்துவமனை செல்வது உள்ளிட்ட பணிகளுக்காக கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிரமப்படுகிறோம். பலமுறை இதுகுறித்து அரசு நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பெய்த மழையால், இந்த மேம்பாலம் நிரம்பி வழிகிறது. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: 2ஆம் போக பாசனம்: பவானிசாகர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு