தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பழவேற்காடு கடல் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு மகிமை மாதா ஆலயம், 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நிழல் கடிகாரம், கலங்கரை விளக்கம் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் உள்ளன.
அதனோடு, பறவைகள் சரணாலயத்தைக் காண படகுகளில் சவாரி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் படகு விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே பழவேற்காடு கடலில் படகு சவாரி செய்ய காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.
இன்று ஒருநாள் பழவேற்காட்டைச் சுற்றிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடாத மக்கள்; தனிநபராகக் கொண்டாடும் ஆசிரியர்!
இதேபோன்று, பூண்டி நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் உள்ள பூங்காக்கள், தண்ணீரில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் குடிமகன்களைக் கைதுசெய்ய மாற்று உடைகளில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.