திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் இரண்டாவது வார்டு அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் வி.எம். சுரேஷ். இவர் நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார். அப்போது, வி.எம். சுரேஷ் கூறுகையில், ”நான் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஒன்றியக் குழு உறுப்பினராக வெற்றிபெற்றேன்.
இதைத் தொடர்ந்து, ஒன்றியக் குழுத் துணைத் தலைவருக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் நான் போட்டியிட்டேன். எனக்கு ஐந்து ஓட்டுகளும் பாஜகவிற்கு நான்கு வாக்குகளும் கிடைத்தது. திமுக சார்பில் போட்டியிட்டவருக்கு 10 வாக்குகள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரை ஒன்றியத் துணைத் தலைவராக அறிவித்தனர்.
இது விதிமுறைகளுக்கு உட்பட்டு முறைகேடாக அறிவிக்கப்பட்டது. எனவே இதனை மறு ஆய்வுசெய்து கடம்பத்தூர் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வி.எம். சுரேஷ் தனது கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக புகார் மனு அளித்தார்.
இதையும் படிங்க: