ETV Bharat / sports

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்து போட்டி.. பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்! - FIBA ASIA CUP QUALIFIERS MATCH

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 22 மற்றும் 25 ஆம் தேதி நடைபெறும் FIBA ஆசியக்கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை, பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கூடைப்பந்து  சங்கத்தினர் குழு புகைப்படம்
இந்திய கூடைப்பந்து சங்கத்தினர் குழு புகைப்படம் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 5:05 PM IST

சென்னை: FIBA ஆசிய கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடக்கூடிய அணியை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யும் பணியானது நடைப்பெற்று வரக்கூடிய சூழலில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தநிகழ்சிய்யில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில்,"கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் முறையாக ஆண்கள் சீனியர் கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி: 24 அணிகள் இந்த தகுதிச்சுற்றில் பங்கேற்க உள்ளனர். 3*3 பார்மட்டில் விளையாடுவதில் கவனம் செலுத்துகிறோம். அதற்காக, பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. 3*3 மற்றும் 5*5 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கிராஸ் ரூட் அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 13 வயது முதல் இலவச கல்வி, பயிற்சி தங்குமிடத்துடன் சர்வதேச உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். 4 ஆண்டுகளுக்குள் 10 அகாடமிகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

2025 ஆம் ஆண்டில் அதன் மாற்றங்களைக் காணலாம். கிரிக்கெட்டைப் போன்று கூடைப்பந்து வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் தேசிய அளவில் போட்டிகள் நடந்திருந்தாலும், கடந்த 13-14 வருடங்கள் முதல் சர்வதேச போட்டிகள் நடத்தப்படவில்லை.

தமிழ்நாடு கூடைப்பந்தாட்டத்தின் மையமாக உள்ளது. விளையாட்டில் அரசின் பங்களிப்பைவிடச் சங்கங்களின் பங்களிப்பு முக்கியமானது. அதற்கான கட்டமைப்புகள் இல்லை. பயிற்சி மையங்கள் சரியாக இல்லை. உள்கட்டமைப்பும் இல்லை. அதிகளவிலான பயிற்சி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். பள்ளி, கல்லூரிகள் உடன் இணைந்து கூடைப்பந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். ஆண், பெண் என இரு அணிகளும் 2026 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் நன்றாக செயல்படுவதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் கோப்பை தொடரை சீர்குலைக்க திட்டமா? இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? பரவும் அதிர்ச்சி தகவல்!

திருநங்கைகளுக்கு தனி சங்கம்: தொடர்ந்து பேசிய அவர்,"திருநங்கைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்தி அதன் மூலம் அவர்களுக்கும் வாய்ப்பளித்து அரசு மூலம் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருநங்கைகளுக்கென்று தனியாக விளையாட்டு அமைப்புகள், சங்கங்கள் இல்லை. ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவளித்து வருகிறது. விளையாட்டைப் பொறுத்துவரை மாநிலம் பொருட்டல்ல. இந்திய அணியாகத்தான் பார்க்கிறோம்.

திறமைதான் முக்கியம். மதம், மாநிலம் ஆகியவற்றை முன்னிறுத்தி செயல்படுவதில்லை. தமிழ்நாட்டில் கிரிக்கெட்டுக்குப் பின்னர் கூடைப்பந்து உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு கூடைப்பந்து விளையாட்டு ஊக்கமளிக்கும். ஆசியாவிலேயே முதல் 3 இடத்தில் இடம்பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உள்கட்டமைப்பு மூலம்தான் சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்க முடியும் அதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். ஸ்பான்சர்கள் வரத் தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார்.

பயிற்சியாளர் ஸ்காட் பிளம்மிங் பேசுகையில், "அமெரிக்காவைச் சேர்ந்த எனக்கு இந்தியா 2 வது வீடு போன்றது. என்.பி.ஏ போட்டிக்காக பயிற்சியளித்து வந்தேன். கடந்த சில மாதங்களாக கடுமையான பயிற்சிகளை அளித்து வருகிறோம். மிகவும் இளைமையான அணியாக இந்தியா உள்ளது.

இந்திய வீரர்களின் திறமைக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். கத்தாருக்கு எதிரான போட்டி குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது. ஆனால், அந்தப் போட்டிக்கான பயிற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். உடற்தகுதி அடிப்படையிலும் இந்திய அணி தயாராக உள்ளது. 3*3 பார்மட்டில் விளையாடுவது 5*5 பார்மட்டை பாதிக்காது. கத்தார், கஜகஸ்தான் அணிகளை எதிர்கொள்ள தயாராகி உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.