திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், கவிஞர் எழுதிய பருவ திருமேனிகள், நெஞ்சைக் களம் ஆகிய இரு நூல்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். அந்த நூல்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் துறை ஜெயவேலு, கல்வியாளர் கோவிந்தராசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் கழக நிர்வாகிகள், திமுகவினர் திரளாக பங்கேற்றனர். பின்னர், ஒரே நாடு ஒரே தேசம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடம் கருத்து கேட்டதற்கு, ஒரே நாடு ஒரே சாதி என மத்திய அரசு கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில், தண்ணீர் பிரச்னை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன், போன்ற பிரச்னைக்கு மக்களவையில் தமிழ்நாடு எம்பிக்கள் குரல் கொடுத்து வருவது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது என்று தெரிவித்தார்.