திருவள்ளூர் மாவட்டம் கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதியில் அடர்வனம் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தனர்.
மாணவர்கள், காவல் துறையினர், கிராம மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் என அனைவரும் ஒன்றாக இணைந்து அனைத்து மரக்கன்றுகளையும் ஒரே நேரத்தில் நட்டனர்.
பின்னர் அப்பகுதி மக்கள் அவர்களை சூழ்ந்துகொண்டு, நீர்தேக்கம் அமைக்க இடம் கொடுத்த தங்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள சுமார் 38 கோடி ரூபாய் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடர்வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடப்படும் என்றார்.
இதையும் படிக்க: சின்ன வீராம்பட்டிணம் ஈடன் கடற்கரைக்குச் சர்வதேச அங்கீகாரம்!