திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்கை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.
இதன்படி தமிழில் புதிய நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்ற 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின்கீழ், தமிழில் புதிய நாட்டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய, கலை நிறுவனங்களிடமிருந்து, 2014-2020ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள், கலைக்குழுக்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் பெறவும் நிபந்தனைகள் பற்றித் தெரிந்துகொள்ளவும்,
உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை என்ற முகவரியிலும், theinm@gmail.com tneinm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காந்தி ஜெயந்தி முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு