திருவள்ளூர்: சென்னை வடக்கு சரகம் துணை போக்குவரத்து ஆணையர் ஜேடிசி ரவிச்சந்திரன் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.மோகன் தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்றது.
இதில், போக்குவரத்து ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், ஜி.மோகன், திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரஹாசன் ஆகியோர் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள், முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் பக்க கண்ணாடிகள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட நபர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்களிடம் டிஎஸ்பி சந்திரஹாசன் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து 35,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதுபோல் வாரம்தோறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன சோதனை நடைபெறும் என போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விஜய்க்கும் ஷோபாவுக்கும் மனக் கசப்பு இல்லை - எஸ்.ஏ. சந்திர சேகர்