திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த காஞ்சி பாடி பகுதியில் கிராம மக்கள் குடிநீருக்காக அங்குள்ள குளத்தை பயன்படுத்திவந்தனர். இந்நிலையில், பருவமழை பொய்த்துப்போனதாலும் கடுமையான வறட்சி காரணமாகவும் அந்தக் குளம் வற்றிப்போனது.
இதைத் தொடர்ந்து குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கைவிடுத்தனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மப்பேடு அருகே இயங்கிவரும் ஓராசிரியர் பள்ளி சார்பில் கிராம மக்கள் பங்களிப்புடன் ரூபாய் 3 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி தருவதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, இன்று பொதுமக்கள் உதவியுடன் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி தொடங்கியது. இப்பணியின்போது இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பணியில் கிராம மக்கள் முழு ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் ஈடுபட்டனர்.