திருவள்ளூர் மாவட்டம் பொன்னம்பலம் கிராமத்தில் உள்ள டிடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டிற்கு சென்ற இஸ்லாமியர்கள் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் 20 பேர் ஆக மொத்தம் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை உள்ளிட்டவைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யதுள்ளது. மேலும் அம்மாநாட்டிற்கு சென்று திரும்பியுள்ள எஞ்சிய நபர்களின் விவரங்களை வைத்து செல்போன் எண் உதவியுடன் கண்டுபிடித்துத் தனிமைப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து தனிமைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க...தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்