ETV Bharat / state

சட்டவிரோதமாக தண்ணீர் கடத்திய 10 டிராக்டர்கள்: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்! - தண்ணீர் கடத்திய டிராக்டர்கள்

திருவள்ளூரில் சட்டவிரோதமாக தண்ணீர் கடத்திய 10 டிராக்டர்களை மறித்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
author img

By

Published : Jun 23, 2021, 1:58 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலைக்கு 20 டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி சிலர் விற்பனை செய்வதாக வட்டாட்சியர் மகேஷிடம் அக்கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்துள்ளனர்.

ஆனால், இது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து தண்ணீர் கடத்தல் நடைபெற்றுவந்தது. இதனை எதிர்த்து கிராம மக்கள் இரும்பு உருக்கு ஆலை நுழைவுவாயில் அமர்ந்து நேற்று (ஜூன் 22) போராட்டம் செய்துவந்தனர். இதனால், அந்தக் கடத்தல் கும்பல் பகல் நேரத்தில் தண்ணீர் கடத்துவதைத் தவிர்த்துவிட்டு, நள்ளிரவில் ஆலைக்குள் நுழைய முயற்சித்தனர்.

டிராக்டர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அப்போது அங்கு மறைந்திருந்த 50-க்கும் மேற்பட்டோர் தண்ணீர் கடத்திவந்த 10 டிராக்டர்களை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உதவி ஆய்வாளர்கள் நீலகண்டன், ராஜு, ரவி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமரசம் செய்து டிராக்டர்களைத் திருப்பி அனுப்பிவைத்தனர்.

இதனால், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். ஆனால், மீண்டும் ஆலைக்குள் டிராக்டர்கள் நுழைந்ததைக் கண்ட கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மேலும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்: நந்தினி, ஆனந்தன் இருவரும் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.