திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த கதிர்வேட்டில் தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நான்கு லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. இதனால் சந்தேகமடைந்த மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலர்கள், மாதவரம் வட்டாட்சியர், புழல் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் அந்த லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது லாரிகளில் சிமெண்ட் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து ஆயிரத்து 600 சிமெண்ட் மூட்டைகளுடன் நான்கு லாரிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் லாரிகளின் ஓட்டுநர்களை கைது செய்த காவல் துறையினர் சிமெண்ட் மூட்டைகள் எங்கிருந்து யாருக்காக கொண்டுவரப்பட்டன, கிடங்கின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: மனித நேயத்தை மறந்து தக்காளிப் பழங்களை அள்ளிய மக்கள்!