திருவள்ளூர்: சமூக நலத்துறை, மகளிர் உரிமை துறை, வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை திருத்தம் மற்றும் வழங்குவதற்கான சிறப்பு முகாம் திருவள்ளுரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூலை 15) நடைபெற்றது.
இதனடிப்படையில் 139 நபர்களுக்கு சமூக நலத்துறை, மகளிர் உரிமை துறை, வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை மூலமாக அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'பணியிட மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொண்ட செந்தில்பாலாஜி!'