திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகையில் உள்ள வேலூர் நெடுஞ்சாலையில் நேற்று (மார்ச் 30) ரமேஷ்-வளர்மதி தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரோ வந்த கார் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ரமேஷ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். வளர்மதியை வாகனவோட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் வளர்மதி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோடினார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட தகவலில், திருத்தணி அருகில் உள்ள தெக்கலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்-வளர்மதி மீன் வியாபாரத்திற்காக சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்பத்திய கார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பதிவு எண் கொண்டுள்ளது தெரியவந்தது.
இதையும் படிங்க: சிறுவன் உடலைப் புதைக்க இடம் மறுப்பு - சர்ச் மீது தாய் குற்றச்சாட்டு