ETV Bharat / state

ஜேசிபி மோதியதில் வீழ்ந்த மதில் சுவர்: சிறுமி பலி; இருவர் கைது! - water work

திருவள்ளூர்: குன்றத்தூர் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kundrathur
author img

By

Published : Aug 19, 2019, 2:04 AM IST

திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள கொல்லச்சேரி பகுதியில் உள்ள குன்றத்தூர் - போரூர் சாலையின் இடதுபுறத்தில் நரிக்குறவர் மக்கள் சிலர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இங்கு குடும்பத்துடன் வசித்து வரும் மோகன் என்பவருக்கு மாசாணி(வயது 5) என்ற பெயரில் பெண் குழந்தை இருந்தது.

house wall broken child death  திருவள்ளுவர்  thiruvalluvar  kundrathur  water work
இடிந்து விழுந்த சுவர்

இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட்டிற்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிக்காக மோகனின் வீட்டருகே சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஜேசிபி இயந்திரத்தின் ஒரு பகுதி இவர்களின் வீட்டின் சுவர் மீது மோதியதில் சுவர் இடிந்து விழுந்தது.

சம்பவ இடம்: குன்றத்தூர் - போரூர் சாலை

அச்சமயம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாசாணி மீது சுவர் விழுந்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர் அலறியடித்து வெளியே வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜேசிபி ஆப்பரேட்டர் ஐயப்பன், உத்திரவேல் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:குன்றத்தூர் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி.

Body:குன்றத்தூர் - போரூர் செல்லும் சாலை குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி பகுதியில் சாலையோரம் நரிக்குறவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர் இங்கு வசித்து வந்தவர் மோகன் நரிக்குறவரான இவர் சிக்குமுடி வியாபாரம் செய்து வருகிறார் இவரது மகள் மாசாணி(5), இந்த நிலையில் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இருங்காட்டுக்கோட்டையிலுள்ள சிப்காட்டிற்கு கொண்டு செல்லும் பணிக்காக குன்றத்தூர் - போரூர் சாலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது Conclusion:இன்று அதிகாலை இந்த பகுதியில் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஜே.சி.பி எந்திரத்தின் ஒரு பகுதி பட்டதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாசாணி மீது சுவர் விழுந்து சிறுமி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் படுத்து கொண்டிருந்த பெற்றோர் அலறியடித்து எழுந்து வெளியே ஓடிவந்த மற்றவர்கள் குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் அறிந்ததும் வழக்குப்பதிவு செய்து ஜேசிபி ஆபரேட்டர் ஐயப்பன் மற்றும் உத்திரவேல் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.