பூந்தமல்லி அடுத்த சம்பத் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(48). இவருக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்காக அந்த வீட்டை இடிக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் அகரமேல், எம்.ஜி.ஆர். சாலையைச் சேர்ந்த ரவி(48) என்பவர் ஈடுபட்டிருந்தார். வீட்டின் சுவர்களில் ஒவ்வொரு பகுதியாக இடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து ரவி மேல் விழுந்ததில் ரவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நாசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த ரவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மாற்றான் பூனைக்குட்டி - இரண்டு வாய்களில் சாப்பாடு கேட்பதால் உரிமையாளர் குழப்பம்!