திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் 33-ஆவது உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது எய்ட்ஸ் நோயாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார். உடனே அருகே இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
காவல் துறையினர் விசாரணையில், அவர் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சாலமோன் என்பது தெரியவந்தது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவரை அப்பகுதியினர் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் சாலமோன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பெண்கள் தீக்குளிக்க முயற்சி!