ETV Bharat / state

கனமழையால் எதிரொலி: பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு! - திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்

திருவள்ளூர்: வடகிழக்குப் பருவமழைகாரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

thiruvallur
thiruvallur
author img

By

Published : Dec 1, 2019, 9:59 PM IST

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையால் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் பெய்யும் கனமழை

இன்று காலை தொடங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. செவ்வாப்பேட்டை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிகளவில் நிரம்பி வருவதால், நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை மழைப் பாதிப்பு - தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை!

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது இதனால் பூண்டி செம்பரம்பாக்கம் சோழவரம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தது

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது இதனால் பூண்டி செம்பரம்பாக்கம் சோழவரம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை இன்று காலை முதல் இரவு வரை நீடித்து வருகிறது திருவள்ளூர் செவ்வாப்பேட்டை ஆவடி கும்மிடிப்பூண்டி பெரியபாளையம் ஊத்துக்கோட்டை ஆரணி பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகிறது ஆங்காங்கே தண்ணீர் நிரம்பி வருவதால் நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.