கரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்போது அங்கு கரோனா அறிகுறியுடன் வந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவருடன் தங்கியிருந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஏழு பேர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்த நபர் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பதால் அந்த நபரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வந்ததன் காரணமாகவே விஜயபாஸ்கர் ஆய்வு செய்ததாகத் தகவல் வெளியானது.
ஆய்வை முடித்த பிறகு அங்கிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் கிளம்பிச் சென்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், சுகாதார துணை இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க... 'தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை' - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்