திருவள்ளூர்: மேலும் போலியோ சொட்டு மருந்து முகாமையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். விழாவில் பேசிய மா. சுப்பிரமணியன், மிகவும் அமைதியான முறையில் 34 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கும், ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்படவும், ஆற்றிவரும் பணியை வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் அரசின் பல மக்கள் நலத்திட்டங்களை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்ப்பதில் சேவாலயா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
மேடையில் 5 பெண் குழந்தைகளுக்கு சோப்பு, சானிடரி நாப்கின், பேரிச்சை, பாதாம், முந்திரி, உலர் திராட்சை, வால்நட், மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய குறிப்புச் சீட்டு அடங்கிய சுகாதாரப் பெட்டகத்தை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணசாமி சேவாலயாவின் சேவைகளை வாழ்த்திப் பேசினார். பல்லாண்டு காலமாக தலைவலி மருந்தின் மூலம் மக்களிடையே பிரபலமாக இருக்கும் அமிர்தாஞ்சன் நிறுவனம் தற்போது பெண் குழந்தைகள் நலனுக்கென முன்னெடுத்துள்ள இந்த முயற்சியைப் பாராட்டினார்.

மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு
அமிர்தாஞ்சன் நிறுவனத்தைச் சேர்ந்த ப்ரியா தணிகாசலம் மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகளைப் பற்றி பெண்களுக்கு தெளிவுபடுத்துதல் மிகவும் முக்கியம் என்றும், பாரம்பரியம் மிக்க அமிர்தாஞ்சன் நிறுவனம் இம்முயற்சியில் சேவாலயாவுடன் இணைந்து செயல்படுவதில் பெருமகிழ்ச்சியடைகிறது என்றும் குறிப்பிட்டார்.
தரமணி சுழற்சங்க நிர்வாகிகள் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் சேவாலயாவிற்கு மரக்கன்றுகள் நன்கொடையாக வழங்கினர். இந்த விழிப்புணர்வு முகாமில் இப்பெண் குழந்தைகளுடன் பெண் மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் ஒரு மணி நேர கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக மாதவிடாய் பின்னணியிலுள்ள அறிவியல், மாதவிடாய் குறித்த தவறான கருத்துகள், கட்டுக்கதைகள், இவை குறித்து வெளிப்படையாகப் பேசுவது போன்ற செயல்களில் தெளிவான விழிப்புணர்வு அளிக்க உள்ளனர். மேலும், பொது சுகாதாரம், பெருந்தொற்றுக் காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் அறிவுறுத்த உள்ளனர்.
இவ்விழாவில் ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றியச் செயலாளர், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இத்திட்டத்தைத் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும், நன்கொடையாளர்களின் உதவியுடன், விரிவுபடுத்த சேவாலயா தயாராக உள்ளது. சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சேவாலயா முரளி வரவேற்புரை வழங்க, சேவாலயாவின் சுகாதாரத் துறைத் தலைவர் கோகுலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.
இதையும் படிங்க:உக்ரைன் ✈ இந்தியா: புறப்பட்டது 5ஆவது விமானம்!