ETV Bharat / state

சிலம்பம்: உலகக்கோப்பைக்கு தேர்வான கும்மிடிப்பூண்டி கல்லூரி மாணவி தமிழினி!

author img

By

Published : Jan 4, 2023, 3:24 PM IST

கிரிக்கெட், ஹை ஜம்ப், சிலம்பம் எனப் பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று வந்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தமிழினி, தற்போது சிலம்பப் போட்டியில் உலகக்கோப்பைக்கு விளையாடத் தேர்வாகியுள்ளார்.

உலகக்கோப்பைக்கு தேர்வான கும்மிடிப்பூண்டி கல்லூரி மாணவி!
உலகக்கோப்பைக்கு தேர்வான கும்மிடிப்பூண்டி கல்லூரி மாணவி!
சிலம்பம்: உலகக்கோப்பைக்கு தேர்வான கும்மிடிப்பூண்டி கல்லூரி மாணவி தமிழினி!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவைச்சேர்ந்தவர், ரவி - ஏகவள்ளி தம்பதி. இவர்களுக்கு தமிழினி, எழில் மதி மற்றும் அறிவரசு ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்தமகள் தமிழினி, ஆரம்பப்பள்ளி பருவத்தில் இருந்தே நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ரன்னிங் வாலிபால் உள்ளிட்டப் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வந்தார்.

நாளடைவில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் மீது ஆர்வம்கொண்ட தமிழினி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள வரதராஜன் சிலம்பாட்ட கலைக்கூடத்தில் வினோத் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றுவந்தார். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற தமிழினி, மாவட்ட அளவில் 2ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றதோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 2ஆவது இடமும், பெண்கள் பிரிவில் உயரம் தாண்டுதலில் முதலிடமும் பிடித்தார். தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த தமிழினி, விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டதால் 2020ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம், மேல்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு அரசு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

அங்கு கோ-கோ, கால்பந்து, கைப்பந்து, வாலிபால், கபடி, கிரிக்கெட், ஹாக்கி, சிலம்பம், களரி, கராத்தே, பாக்சிங், கிக் பாக்சிங் போன்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் 2021ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில், மாநில அளவில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.

இதற்கான தேர்வு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்கேற்ற 20 மாணவர்களில் 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழினியும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது தமிழ்நாடு சார்பில் மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய அளவில் கேரளாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பீகார், ஒடிசா, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு அரசு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சார்பில் தமிழினி சிலம்பம் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வென்றார். இதனால் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை சிலம்பப் போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடும் வாய்ப்பையும் தமிழினி பெற்றுள்ளார்.

இதுகுறித்து சாதனைப்பெண் தமிழினி கூறுகையில், 'உலகக்கோப்பை சிலம்பப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதில் எந்த ஐயமும் இல்லை. தொடர்ந்து இந்தியாவிற்காக விளையாடும் மகளிர் லெவனில் பங்கேற்று விளையாடுவது எனது லட்சியம். அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தருவார் என நம்புகிறேன்.

அந்த வாய்ப்பை என்னைப்போல் விளிம்பு நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் தவறவிடக்கூடாது. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் எனது பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்' என்றார்.

இதையும் படிங்க: தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.