திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செஞ்சியகரத்தில் நேற்று(செப் 17) மாலை தாத்தா ரோஸ் (72), கல்லூரி மாணவனான பேரன் விக்னேஷ் (21) இருவரும் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றனர்.
அப்போது மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பேரன் விக்னேஷ் மின்சாரம் தாக்கி கிணற்றில் விழுந்தார். பேரன் துடிதுடிப்பதை கண்ட தாத்தா ரோஸ் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றார். அவரும் அப்போது உயிரிழந்தார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் தேடியதில் தாத்தா, பேரன் இருவரும் கிணற்றில் உயிரிழந்து மிதந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவலர்கள் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.