ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி ஆர்ப்பாட்டம் - close down tasmac shop in tiruvallur

திருவள்ளூர் பந்திகுப்பம் பகுதியில் இயங்கிவரும் மதுபானக் கடையை மூடக் கோரி பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Mar 15, 2021, 1:51 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பந்திகுப்பம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை மூடக் கோரி பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் மது அருந்த வரும் நபர்கள் பாட்டில்களை சாலைகளில் உடைத்து விடுவதாகவும், போதையில் சிலர் பெண்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்கே பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திர குமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கோவையில் விரைவு ரயில் மோதி ஆண் காட்டு யானை படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.