திருவள்ளூர்: பழவேற்காடு சுற்றுலா பகுதியில், கரோனா ஊரடங்கை முன்னிட்டு படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மீனவர்களைத் தவிர பயணம் செய்வதற்கு பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுத்துறையைச் சேர்ந்த 6 வாகனங்களில் அரசு அலுவலர்கள் அலுவலகத்தை புறக்கணித்துவிட்டு பழவேற்காட்டிற்கு வந்து மீன் மார்க்கெட் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு, 3 படகுகளில் பழவேற்காடு ஏரியில் சவாரி செய்துள்ளனர்.
அதுவும், அரசு பணி நேரமான காலை 10 முதல் மாலை 4 மணி வரை, இந்தத் தடைசெய்யப்பட்ட படகு சவாரியை மேற்கொண்டுள்ளனர்.
அரசு அலுவலர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பணி நேரத்தை புறக்கணித்து பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் கவனத்தில் கொள்ளாமல், மக்கள் வரிப்பணத்தை தங்கள் உல்லாச பயணத்திற்கு செலவு செய்திருப்பது கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.