ETV Bharat / state

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு! - தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி ரொக்கப் பணம் கொள்ளை

பெரியபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
author img

By

Published : Apr 26, 2022, 7:14 AM IST

திருவள்ளூர்: எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், ஆர்.ஜி.என் நகரில் வசித்து வருபவர் பிரதீஷ்(36). இவருக்கு சுவேதா என்ற மனைவியும், கிருஷிக் நரசிம்மா (8), அத்விக் நரசிம்மா (4) என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பிரதீஷ் தனது மகன்களின் படிப்பிற்காக சென்னை அண்ணா நகரில் வீடு வாங்கி அங்கு வசித்து வருகிறார். இருப்பினும், பெரியபாளையம் பகுதியில் வீடு மற்றும் விவசாய நிலம் உள்ளதால் இந்த வீட்டில் தங்கி விவசாயம் மற்றும் தொழிலை கவனித்து வருகிறார்.

இந்நிலையில், பிரதீஷ் தனது நண்பர் அமர் என்பவருடன் கடந்த வியாழக்கிழமை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றிருந்தார். எனவே தனது வீட்டிற்கும், வீட்டுக் காவலுக்கும் உள்ள மூன்று நாய்களை பராமரிக்கவும் இவரது கார் டிரைவர் ராமாபுரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பிரதீஷ் (23) என்பவர் வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், ஏப். 24ஆம் தேதி காலை டிரைவர் பிரதீஷ் வீட்டிற்கு வந்தபோது மயங்கி விழுந்திருந்த மூன்று நாய்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டதை கண்டுள்ளார். மேலும், வீட்டின் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்ட தகவலை, முதலாளி பிரதீஷிக்கு, ஓட்டுநர் பிரதீஷ் கூறியுள்ளார். பின்னர்,இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரொக்க பணம், 21 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் காவல் துறையினர் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: Video: பெண்ணிடம் தவறாக நடந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்கமாற்றால் அடி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.