ETV Bharat / state

தனியாக சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு! - women

திருவள்ளுர்: ஆவடியில் இரு சக்கர வகனத்தில் தனியாக சென்ற பெண்ணை வழிமறித்து 5 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு!
author img

By

Published : Jul 28, 2019, 7:11 PM IST

திருவள்ளுர் மாவட்டம் ஆவடியை அடுத்த அன்னனூர், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார். இவரது மனைவி ரேகா (28) அம்பத்தூர், சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை சூரப்பட்டு பகுதியில் உள்ள நோயாளி ஒருவருக்கு ஊசி போட இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

அவர் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவரது பின்னால் பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் தீடீரென வழிமறித்து ரேகா கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து உள்ளார்.

அப்போது ரேகா சத்தமிட அந்த இளைஞர் பைக்கில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இது குறித்து அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Intro:அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் பெண்ணிடம் 5 சவரன் தங்க சங்கிலி பறித்த வழிப்பறி ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.Body:ஆவடியை அடுத்த அண்ணனூர், சிவசக்தி நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகேஷ்குமார். இவரது மனைவி ரேகா (28). இவர் அம்பத்தூர், சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாலை அருகே சூரப்பட்டு பகுதியில் உள்ள நோயாளி ஒருவருக்கு ஊசி போட மொபட்டில் புறப்பட்டார். 

   இவர், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், கிழக்கு பாலாஜி நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் பைக்கில் வந்த 3வாலிபர்கள் திடீரென வழிமறித்து உள்ளனர். பின்னர், அவர்களில் ஒருவன் பைக்கில் இருந்து இறங்கி வந்துள்ளான். அதன் பிறகு, அவன் ரேகா கழுத்தில் கிடந்த 5சவரன் தங்க சங்கிலியை பறித்து உள்ளான். 

   இதனை அடுத்து, அவர் சப்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து உள்ளார். அவரது சப்தம் கேட்டு, வாகன ஓட்டிகள் வருவதற்குள் அந்த வாலிபர்  தயாராக இருந்த பைக்கில் ஏறி தப்பி சென்றான். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.