திருவள்ளூரில் எக்விடாஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிதி நிறுவனம் வீடுகட்ட கடன், நிலத்தின் மீது கடன், வியாபார கடன் என பல்வேறு வகையான கடன்களை வழங்கிவருகின்றது. இந்த நிதி நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டனை வீடுகட்ட கடன் கேட்டு சிலர் அணுகியுள்ளனர். ஆனால் வீடு கட்டாமல் கட்டியதாக போலியான ரசீது தயார் செய்து தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து 17 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனைப் பெற்றுள்ளனர்.
இதற்கு உடந்தையாக இருந்து வந்த உதவி மேலாளர் கார்த்திகேயன், சதீஷ் ஆகியோர் மீது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் முதன்மை மேலாளர் வெற்றிவேல் கொடுத்த புகாரின் பேரில் கடந்த வாரம் 3 பேரை கைது செய்தனர்.
பின்னர், போலியான ஆவணங்கள் மூலம் வீட்டை கட்டாமலேயே கட்டியதாக நூதன மோசடி செய்ததாக திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணன், உதயகுமார், பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராவ், சென்னையைச் சேர்ந்த சரவணன், ஸ்ரீதர், நாகலட்சுமி, சுகுமாறன் ஆகியோரை திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் அவர்களை சிறையில் அடைத்தனர்
இதையும் படிங்க : மோசடியை தட்டிக்கேட்டது குற்றமா? - பாதிக்கப்பட்டவரை கடத்திய மோசடி கும்பல்